சீனப் பொருளாதார மீட்சியில் சிறு தொழில் நிறுவனங்களின் நிலைமை

வான்மதி 2020-09-01 13:53:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஆக்கத் தொழிலின் கொள்வனவு மேலாளர் குறியீடு ஆகஸ்டு திங்கள் 51 விழுக்காட்டுடன் தொடர்ந்து 6 மாதங்களாக மாறுநிலை புள்ளிக்கு மேல் உள்ளது என்பதைச் சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் ஆகஸ்டு 31ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன. புள்ளிவிவரங்களின்படி, வினியோகமும் தேவையும் தொடர்ந்து மீட்சியடைந்து வருகின்றன. சீனப் பொருளாதார மீட்சிக்கு இது ஆக்கப்பூர்வ அறிகுறியாகும்.

இப்பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், ஆகஸ்டு திங்கள் சீன ஆக்கத் தொழிலின் பிஎம்ஐ குறிபீடு ஓரளவு உயர்நிலையில் இருப்பது என்பது, சீனப் பொருளாதாரத்தின் மீட்சிப் போக்கு மேலும் வலுவடைந்துள்ளதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

இருப்பினும், ஆகஸ்டில் சிறு தொழில் நிறுவனங்களின் பிஎம்ஐ குறியீடு ஜுலையில் இருந்ததை விட 0.9 புள்ளிகள் குறைந்து, 47.7 விழுக்காடாக மட்டும் இருந்தது. அவற்றில் 50 விழுக்காட்டுக்கும் மேலான நிறுவனங்கள் சந்தைத் தேவை பற்றாக்குறையையும் 40 விழுக்காட்டுக்கும் மேலான நிறுவனங்கள் மூலதன நெருக்கடியையும் சந்தித்து, இன்னல்மிக்க நிலையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்