உலகளவில் வேகமான இலக்கமுறை வர்த்தக வளர்ச்சி

வாணி 2020-09-06 17:18:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலக்கமுறை வர்த்தக வளர்ச்சியின் போக்கு மற்றும் முன்னணி பற்றிய கருத்தரங்கு 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சியாவ் கோட்சிங் கூறுகையில், 2019ஆம் ஆண்டு சீனாவில் இலக்கமுறை பொருளாதார மதிப்பு 35 இலட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இந்த அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் 36.2 விழுக்காடாகும் என்று தெரிவித்தார்.

தவிரவும், கடந்த ஆண்டு சீன இலக்கமுறை வர்த்தகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு 20 ஆயிரத்து 360 கோடி அமெரிக்க டாலராகும். இது முந்தைய ஆண்டை விட 6.7 சதவீதம் அதிகமாகும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் வாங் பிங்னான் குறிப்பிட்டார்.

ஐ.நாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு வழங்கிய தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில், உலகளவில் சேவை வர்த்தகத்தில் சுமார் பாதி அளவு இலக்கமுறை மயமாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்