சீனப் பொருளாதார மீட்சியில் நல்ல அறிகுறிகள்

2020-10-02 15:36:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த செப்டம்பர் திங்களில், சீன உற்பத்தித் துறையைச் சேர்ந்த பி.எம்.ஐ என பொதுவாக அறியப்படும் கொள்முதல் மேலாளர் குறியீடு, 51.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று செப்டம்பர் 30ஆம் நாள் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதன்படி, இந்த குறியீடு, ஆகஸ்ட் திங்களில் இருந்ததை விட, 0.5 புள்ளிகள் அதிகம்.

செப்டம்பரில் சீன உற்பத்தித் துறையின் பி.எம்.ஐ குறியீடு, பொருளியலாளர்களின் முன்மதிப்பீட்டை விட அதிகம். இந்நிலையில், சீனப் பொருளாதாரம் மீட்சி அடைந்து வரும் போக்கு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது என்று வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

சீன அரசாங்கம் வெளியிட்ட உதவி நடவடிக்கைகள், உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. இதனால், சர்வதேச சந்தைத் தேவை, குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது. செப்டம்பர் திங்களில் சீனப் பொருளாதாரத்துக்கு மேலதிக உந்து சக்தி கிடைத்துள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் 30ஆம் நாள் தெரிவித்துள்ளது.

மேலும், சீனப் பொருளாதாரம் மீட்சி அடைவது, சீனா மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை மேம்படுத்தி வருகிறது. அது, சீன நாணயமான ரென்மின்பியின் மதிப்பை உயரச் செய்துள்ளது. சீனப் பொருளாதாரம், சீன நாணய மதிப்பு அதிகரிப்பதற்கு காரணங்களில் ஒன்றாகும் என்று அமெரிக்க முதலீட்டுத் துறையினர் கருதுகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்