சீனாவின் தொழிற்துறையில் இயந்திர மனிதனின் பயன்பாடு

2017-08-27 16:09:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn
2017 சீனாவில் இயந்திர மனிதன் தொழிலின் வளர்ச்சி அறிக்கை 26ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. அதன்படி, சீனாவின் இயந்திர மனிதன் சந்தை வேகமாக வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. சீனாவின் தொழிற்துறையில் இயந்திர மனிதனின் சந்தை உலகளவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மிகப் பெரியதாக உள்ளது.
2017ஆம் ஆண்டு சீனாவின் தொழிற்துறை இயந்திர மனிதனின் விற்பனை ஓர் இலட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டும். சந்தை அளவு 422 கோடி அமெரிக்க டாலராக இருக்கும் என்றும்,இதில் சேவை வகை இயந்திர மனிதனின் சந்தை அளவு 132 கோடி அமெரிக்க டாலராகும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதியோர் சேவை, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் இயந்திர மனிதனுக்கான தேவை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்