சீன அணு பாதுகாப்புக்கு சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீடு

2017-08-28 14:37:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அணு பாதுகாப்புக்கு சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீடு

சீனத் தேசிய அணு ஆற்றல் நிறுவனத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் சீனா மீது மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச அணு பாதுகாப்பு மதிப்பீடு 28ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. வரும் 10 நாட்களில், சீனாவின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு முறையும், அணு வசதிகளின் பாதுகாப்புத் திறனும் சர்வதேச அணு பாதுகாப்பு துறையின் புதிய சிந்தனை, அதியுயர் வரையறை மற்றும் தலைசிறந்த நடைமுறைகளுக்கிணங்க மதிப்பீடு செய்யப்படும். சீன அணு பாதுகாப்பு பணியை முன்னேற்றி சர்வதேச நிலையை எட்டும் வகையில், உரிய கருத்துக்களும் வழங்கப்படும்.

சீன அணு பாதுகாப்புக்கு சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீடு

இத்தகைய மதிப்பீடு முன்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2014ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதியைச் செயல்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்