பிரிக்ஸ் அமைப்பின் புதிய 10 ஆண்டுகள்

2017-08-28 18:27:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாடு வரும் செப்டெம்பர் திங்களில் சீனாவின் சியாமன் நகரில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சீன அரசவை செய்தி அலுவலகம் 28ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. இந்த உச்சி மாநாடு மூலம், பிரிக்ஸ் அமைப்பு தனது 2ஆவது பொற்கால பத்தாண்டுகளை வரவேற்கும் என்று நிபுணர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத் துறையில் 5 பிரிக்ஸ் நாடுகளின் பங்கு முன்பு இருந்த 12 விழுக்காட்டிலிருந்து 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பன்னாட்டு வர்த்தகத் துறையில் அவற்றின் பங்கு 11 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காட்டாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்கு 7 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காட்டாக மாறியுள்ளது. உலகப் பொருளாதார அதிகரிப்பில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு விகிதம் பாதியளவைத் தாண்டியுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்த தரவுகள் தொடர்ந்து உயரும் என்றும், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் அதிக பயன் பெறும் என்று சீன சர்வதேசப் பொருளாதார பரிமாற்ற மையத்தின் முதன்மை ஆய்வாளர் சாங் யேன்சங் கருத்து தெரிவித்தார். நடைபெறவுள்ள சியாமன் உச்சி மாநாடு பற்றி அவர் கூறுகையில்,

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாளியுறவை ஆழமாக்குவது பற்றி 4 துறைகளில் முயற்சி செய்வோம். முதலாவதாக, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஆழமாக்குவதன் மூலம் உலகளவில் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றலாம். இரண்டாவதாக, உலக மேலாண்மை ஆற்றலை வலுப்படுத்தி அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்கலாம். மூன்றாவதாக, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் மானுடவியல் பரிமாற்றத்தை விரிவாக்கி பொது மக்களுக்கிடையிலான நட்புறவை வளர்க்கலாம். நான்காவதாக, தொடர்ந்து அமைப்புமுறை கட்டுமானத்தில் ஈடுபட்டு, மேலும் பரந்த அளவிலான கூட்டாளியுறவை உருவாக்கலாம் என்று அவர் கூறினார்.

ஆக்ஸ்ட் திங்களில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் சேவை வர்த்தகத் துறை ஒத்துழைப்புக்கான நெறிவரைப்படம் உள்ளிட்ட 8 ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சியாமன் உச்சிமாநாட்டில் இவை பரிசீலனைக்காக முன்வைக்கப்படும். சீன வணிக அமைச்சின் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆய்வகத்தைச் சேர்ந்த கல்வியியல் குழுவின் துணைத் தலைவர் சாங் ச்சியேன்பிங் கூறுகையில்,

மேலும் நெருக்கமான ஒத்துழைப்புக் கூட்டாளியுறவைக் கட்டியமைப்பது இவ்வாண்டு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். அமைதி, வளர்ச்சி, உலக மேலாண்மை, பொருளாதார மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை முன்னேற்றும் கூட்டாளியுறவு இதுவாகும் என்று அவர் கூறினார். இவற்றில் முதலீட்டுத் துறை மிக கவனத்துக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அனைத்து வளரும் நாடுகளுக்கும் திறந்துவிடும் பிரிக்ஸ் ஒத்துழைப்பு முறையும் சியாமன் உச்சிமாநாட்டில் முன்வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்