பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருள்: மின்னணு வணிக அலுவல்

2017-08-29 14:58:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில ஆண்டுகளில், பெருந்தரவு, சரக்குப் போக்குவரத்து, வலைப்பின்னல் போன்ற அறிவியல் தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. உலகளவில் மின்னணு வணிக அலுவல் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. எதிர்காலத்தில், மின்னணு வணிக அலுவல், பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருளாக திகழும். உலக மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் மின்னணு வணிக அலுவலை விரைவுபடுத்தும் வகையில், பிரிக்ஸ் நாடுகளகின் செயல் குழு, தொழில் மற்றும் வணிக துறை மின்னணு ஒன்றியத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதியில், மின்னணு வணிக அலுவல் பயிற்சி வகுப்பை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள், ஆய்வாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலியோர் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படுவர் என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பிரிவின் தலைவர் சாங் சௌ காங் 28ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்