பிரிக்ஸ் நாடுகளின் புதுமைத் திறன் மேம்பாடு

2017-08-29 16:50:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017 பிரிக்ஸ் நாடுகளின் புதுமைப் போட்டித்திறன் என்ற அறிக்கையை,  சீன அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்ற மையம் 29ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் தொகுப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதியுரையகங்களைச் சேர்ந்த சுமார் 40 நிபுணர்களும் அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புதுமைக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் உலக நாடுகளின் ஒதுக்கீட்டில், பிரிக்ஸ் நாடுகளின் பங்கு சுமார் 17 விழுக்காடாகும். உயர் தொழில் நுட்பங்களின் ஏற்றுமதித் தொகை சுமார் 6 லட்சம் கோடி அமெரிக்க டாலர். இந்த ஏற்றுமதி தொகை, உலகச் சந்தையில் 28 விழுக்காடு பங்கு கொண்டது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அறியவில் தொழில் நுட்பம் தொடர்பான இதழ்களில் பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை 5லட்சத்து 90ஆயிரத்தை எட்டியதோடு, அதன் பங்கு உலக நாடுகளில் 27 விழுக்காடாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அறிவியல் தொழில் நுட்பங்களின் புதுமைக்காக பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு உயர்ந்துள்ளதை, இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச செல்வாக்கு நாளுக்குநாள் உயர்ந்து வருவதையும் இவை குறிக்கின்றன என்று இந்த அறிக்கையின் தொகுப்புப் பணிக்கான குழுவின் உறுப்பினர் சாவ் ஷின்லீ கருத்து தெரிவித்தார்.

மேலதிகமாக, இந்த அறிக்கையில் பிரிக்ஸ் நாடுகளின் புதுமைப் போட்டித்திறன் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  2016ஆம் ஆண்டு, சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், இந்தியா தரவரிசையில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. 2001 முதல் 2016 வரை, பிரிக்ஸ் நாடுகளின் புதுமைப் போட்டித்திறன் உயர்ந்துள்ளது. ஐந்து நாடுகளில், சீனா மற்றும் ரஷியாவின் போட்டியாற்றல் வேகமாக உயர்ந்துள்ளது. இந்தியா, மதிமாக உள்ளது. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா மந்தமாக உயர்ந்துள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின்  புதுமைப் போட்டித்திறனின் எதிர்கால வளர்ச்சி குறித்து சாவ் ஷின்லீ பேசுகையில்,

2030ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் புதுமைத் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதில், சீனா, தலைமைஇடம் வகிக்கிறது. 2030ஆம் வரை, சீனாவின் பன்முகமான புதுமைத்திறன், உலகின் முன்னிலை இடங்களில் இணைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.

அடுத்த கட்டம்,  திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை அதிகரித்து, திறமைசாலிகளின் பரிமாற்றத்தை விரிவாக்க பிரிக்ஸ் நாடுகள் செயல்பட  வேண்டும் என்று இந்த அறிக்கையில் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்