பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் அறிமுகம்

மதியழகன் 2017-08-30 17:10:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் அறிமுகம்

சீனாவின் சியாமென் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாடு, வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஆகியவை தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம்  நடத்தி, இந்த மாநாடு மற்றும் பேச்சுவார்த்தையை குறித்து அறிமுகம் செய்துள்ளதோடு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இக்கூட்டத்தில் பேசுகையில்,

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிற உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் பொது கவனம் செலுத்தும் விவகாரங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார். இந்த மாநாட்டில், வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும். ஐந்து பிரிக்ஸ் நாடுகள், எகிப்து, கினி, மெக்சிகோ, தஜிகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் சியாமென்னில் கூடி, வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையான ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.

நடப்பு உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்து வாங்யீ அறிமுகம் செய்தபோது,

வரும் செப்டம்பர் 3ஆம் மாலை முதல் 4ஆம் நாள் காலை வரை,  வரலாற்றில் மிக பெரிய அளவிலான பிரிக்ஸ் நாடுகளின் வணிக மற்றும் தொழில் மன்றக் கூட்டம் நடைபெறும். 4ஆம் நாள் காலை, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது சந்திப்பு, சியாமென் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடத்தப்படும்.  அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், வெளிநாட்டுத் தலைவர்களுடனான பல்வகை கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். அப்போது, சியாமென் அறிக்கை ஒன்று கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். 5ஆம் நாள் காலை, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஷிச்சின்பிங் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ஷிச்சின்பிங் கலந்து கொள்வார் என்று கூறினார்.

10 ஆண்டுகளாக வளர்ந்த பிறகு, பிரிக்ஸ் நாடுகள், உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, உலக ஒழுங்குமுறைச் சீர்திருத்தத்தை முன்னெடுத்து, சர்வதேச அமைதியைப் பேணிக்காக்கும் முக்கிய சக்தியாக மாறியுள்ளன. 2017ஆம் ஆண்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு 2ஆவது பத்தாண்டுக்காலம் தொடங்குகிறது. இந்த முக்கிய தருணத்தில், பிற உறுப்பு நாடுகளுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்பை அதிகரித்து, வலுப்படுத்தவும் பிரிக்ஸ் அமைப்புமுறையின் செல்வாக்கை உயர்த்தவும் சீனா விரும்புகிறது என்று வாங்யீ சுட்டிக்காட்டினார்.

சியாமென் மாநாட்டில் 5 விஷயங்கள் எதிர்பார்க்கத் தக்கவை என்று வாங்யீ கூறினார். முதலாவது, மேலும் வலிமையான ஒத்துழைப்பை குவிப்பது. இரண்டாவது, பிரிக்ஸ் கூற்றை மேலும் வலுவாக எழுப்புவது, மூன்றாவது, உறுதியான சமூக அடிப்படையை உருவாக்குவது, நான்காவது, மேலும் பரந்த அளவில் கூட்டுறவை அமைப்பது, ஐந்தாவது, அமைப்புமுறையின் உருவாக்கத்தை வலுப்படுத்துவது என்றும் அவர் விவரித்தார்.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்