பிரிக்ஸ் வங்கி வழங்கிய கடன் தொகை 250 கோடி அமெரிக்க டாலர்

வாணி 2017-08-31 18:58:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி மொத்தமாக 250 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகை வழங்கும் என்று மதிப்பிடுவதாக சீன நிதி அமைச்சகத்தின் பன்னாட்டு நிதி மற்றும் பொருளாதார மையத்தின் தலைவர் சோ சியாங்வூ கூறியுள்ளார். ஷாங்காய் மாநகரில் இவ்வங்கியின் தலைமையகக் கட்டிடம் விரைவில் கட்டியமைக்கப்படத் துவங்கும் என்றும் அவர் கூறினார்.

31ஆம் நாள் சீன அரசவை செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், புதிய வளர்ச்சி வங்கி இயங்க துவங்கிய கடந்த இரு ஆண்டுகளில் பல துறைகளில் அதிக முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் வங்கி வழங்கிய கடன் தொகை 250 கோடி அமெரிக்க டாலர்

ஆப்பிரிக்காவிலுள்ள இவ்வங்கியின் மையம் ஆகஸ்ட் திங்கள் 17ஆம் நாள்  தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இயங்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்