பிரிக்ஸ் அமைப்பின் எதிர்கால ஒத்துழைப்பு

மதியழகன் 2017-09-01 19:28:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடையேயான 9ஆவது சந்திப்பு வரும் செப்டம்பர் 3 முதல் 5ஆம் நாள் வரை சீனாவின் ஃபூ ஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் நடைபெறவுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, சீனா மீண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்துவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாடு, இவ்வாண்டின் சீனாவின் வெளியுறவுத்துறையின் மிக முக்கிய ஒரு பணியாகும்.

இந்த மாநாட்டை முன்னிட்டு, செப்டம்பர் முதல் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில், ‘பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் எதிர்காலம் எங்கு செல்லும்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நடப்பு உச்சி மாநாட்டின் முக்கியத்துவம், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு முறையின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

சியாமென்னில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாடு, புதிதாக வரும் சந்தைகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு புதிய உந்து சக்தியை கொண்டு வரக் கூடும் என்று இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிஞர்கள் அனைவரும் கருதுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த வளர்ச்சிக்குப் பிறகு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு முறை முன்னேற்றமடைந்துள்ளது. ஒத்துழைப்புகளின் இலக்கு மேலும் தெளிவாக காணப்பட்டுள்ளன. நடப்பு உச்சி மாநாடு, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு 2ஆவது பத்தாண்டுக்காலக் கட்டத்தைத் தொடக்கி வைக்கிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை முழுமைப்படுத்தி, சர்வதேச அரங்கில் பிரிக்ஸ் மேலும் தெளிவான பங்களிப்பை ஆற்றுவதில் எப்படி செயல்படும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், சீன சமூக அறிவியல் கழகத்தின் உலகப் பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஷு சியுஜுன் கூறியதாவது

முதலாவதாக,  பிரிக்ஸ் ஒத்துழைப்பு முறை, ஐந்து உறுப்பு நாடுகள் ஒரு ஒற்றுமைப்பாட்டு பெரிய சந்தையை அமைப்பதற்கான மேடையாக இருக்க வேண்டும். இரண்டவதாக, இந்த ஒத்துழைப்பு முறை, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கு ஒரு முக்கிய மேடையாகவும் விளங்க வேண்டும். மூன்றாவதாக,  புதிதாக வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் உலக நிர்வாகத்தில் பங்கேற்க செய்யும் மேடையாகவும் திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், பிரிக்ஸ் நாடுகள், மேலதிக வளரும் நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச அரங்கில் மேலும் முக்கிய சக்தியாக மாறும் வகையில், பிரிக்ஸை விரிவாக்க வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து, சீனா மற்றும் உலகமயமாக்கத்துக்கான மையத்தின் உயர்நிலை ஆய்வாளர் சோ சியாவ்ஜிங் பேசியபோது

நடப்பு மாநாட்டில், பிரிக்ஸ் பிளஸ் என்பது அதிக கவனத்தை ஈர்க்கும் பகுதியாகும். அது, உலகின் சமநிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு புதிய பங்கு ஆற்றும். பிரிக்ஸ் அமைப்புமுறை மூலமாக, பிரிக்ஸ் ஒத்துழைப்புக் கூட்டாளிகளை அதிகரித்து, உலகின் பொதுவான செழுமை என்ற இலக்கை நனவாக்க வேண்டும் என்று கூறினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்