சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

பூங்கோதை 2017-09-04 11:46:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினை செப்டம்பர் 3ஆம் நாள் சியாமென் நகரில் சந்தித்துரையாடினார்.

சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் விளாடிமிர் புதின் கலந்து கொள்வதற்கு ஷி ச்சின்பிங் வரவேற்பை தெரிவித்தார். ஷி ச்சின்பிங் பேசுகையில், ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை இரு தரப்பும் வலுப்படுத்துவதோடு, ஆதரவையும், நெடுநோக்கு ஒத்துழைப்பையும் முன்னேற்ற வேண்டும். ரஷியாவுடன் கைகோர்த்துக்கொண்டு முயற்சி செய்து, சீன-ரஷிய உறவை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்றி, பிரதேச மற்றும் உலக அமைதியையும் நிலைப்புத் தன்மையையும் பேணிக்காக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

மேலும், தற்போதைய சூழ்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிரிக்ஸ் நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. சர்வதேச சமூகம் குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் எதிர்பார்ப்பு இதுவாகும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

புதின் பேசுகையில், ரஷிய-சீன உறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. முதலீடு, எரியாற்றல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள ரஷியா விரும்புகிறது. அத்துடன், சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ரஷியா ஆதரவு அளிக்கிறது என்றார் அவர்.

மேலும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து, அவர்கள் இருவரும் ஆழ்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்