யாங்சியேச்சி-ஆசிஃப் சந்திப்பு

ஜெயா 2017-09-09 15:48:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

யாங்சியேச்சி-ஆசிஃப் சந்திப்பு


சீன அரசவையின் உறுப்பினர் யாங்சியேச்சி 8ஆம் நாள் பெய்ஜிங்கில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் க்வாஜா ஆசிஃபுடன் சந்தித்துரையாடினார்.

சீன-பாகிஸ்தான் உறவு நெருக்கமாகவும் நட்பாகவும் உள்ளது. மற்றதன் மைய நலன் துறைகளில், ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன. சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக் கட்டுமானத்தை இரு தரப்பும் முன்னேற்ற வேண்டும். பிரதேச பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் குறித்து, இரு தரப்பும் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்கு ஆற்ற வேண்டும் என்று யாங்சியேச்சி கூறினார்.

பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் கட்டுமானத்தை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றப் பாடுபடும் என்று ஆசிஃப் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்