மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் ஓடும் புல்லட் தொடர்வண்டி சீனாவில் இன்று தொடக்கம்

மதியழகன் 2017-09-21 16:46:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக புல்லட் தொடர்வண்டிச் சேவை இன்று வியாழக்கிழமை முதல் சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களிடையே தொடங்குகிறது.

சீனாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஃபுஷிங்’எனும் புதிய தலைமுறை அதிவேக புல்லட் தொடர்வண்டி இந்தச் சேவைக்கு இயக்கப்பட்டு வருகிறது.இந்த புல்லட் தொடர்வண்டி, பெய்ஜிங்கிற்கும் ஷாங்காய்க்கும் இடையே உள்ள 1318 கிலோமீட்டர் தூரத்தை 4.5மணி நேரத்துக்குள் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, தொடர்வண்டி மணிக்கு 300 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் பெய்ஜிங்கிற்கும் ஷாங்காய்க்கும் இடையே ஓடியது. இதே வேகத்தில் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்த பிறகு தற்போது மணிக்கு 350 கிலோமீட்டர் அதிகபட்ச வேகத்தில் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்