19ஆவது தேசிய மாநாட்டிற்கு செய்தி மையம் இயக்கம்

மதியழகன் 2017-10-11 17:10:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

19ஆவது தேசிய மாநாட்டிற்கு செய்தி மையம் இயக்கம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டிற்கு செய்தி மையம் 11ஆம் நாள் புதன்கிழமை இயங்கத் தொடங்கியது. பெய்ஜிங்கிலுள்ள மீடியா ஹோட்டலில் அமைந்துள்ள இந்தச் செய்தி மையம், செய்தியாளர்களின் சான்றிதழ் மற்றும் பேட்டியளிக்கும் விண்ணப்பம் உள்ளிட்டவை தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. கடந்த செப்டம்பர் 8 முதல் 25ஆம் நாள் வரை செய்தியாளர்கள் பெயர் பதிவு செய்வதற்கான இணையதளம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும், செய்தி மையத்தின் இணையதளம் மற்றும் வீசாட் செயலின் சமூக ஊடக கணக்கு ஆகியவை புதன்கிழமை திறந்து வைக்கபட்டுள்ளன.19ஆவது தேசிய மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சி நிரல், புதிய செய்திகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை சீனம் மற்றும் ஆங்கிலத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்