வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் சீனாவின் சாதனைகள்

மதியழகன் 2017-10-12 18:34:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் வளரும் நாடுகளில் சீனா 25ஆவது ஆண்டாக முதல் இடத்தை வகிக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனா அந்நிய முதலீட்டைப் பயன்படுத்தும் அளவு நிலையாக உள்ளது. இந்த முதலீட்டைப் பயன்படுத்தும் தரம் மேம்படுத்தப்பட்டது. சீனாவில் அந்நிய முதலீட்டு நிர்வாக அமைப்புமுறையிலும் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை, சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம். சீனாவில் அந்நிய முதலீடு பற்றி காவ் ஃபெங் மேலும் கூறியதாவது:

உலகளவில் பன்னாட்டு முதலீடு 2 விழுக்காடு குறைந்த பின்னணியில், 2016ஆம் ஆண்டு சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுத் தொகை, 86 ஆயிரத்து 440 கோடி யுவானாக பதிவாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த்தை விட 3 விழுக்காடு அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் சீனா தொடர்ந்து 25ஆவது ஆண்டாக வளரும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது என்றார் அவர்.

தற்போது,வெளிநாட்டு முதலீடு மேலதிகமாக சீனாவின் புதிய உயர் தொழில் நுட்பத் துறைக்குச் செல்லும் போக்கு காணப்படுகிறது.புள்ளிவிபரங்களின் படி,கடந்த ஆண்டு, புதிய உயர் தொழில் நுட்பத் துறைக்கான முதலீடு,மொத்த வெளிநாட்டு முதலீட்டில் சுமார் 20விழுக்காடு பங்கு கொண்டது.சீனாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 2,400ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில்,வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைகளைச் செயல்படுத்தும் துறைகளை விரிவாக்கவும்,மேலும் நல்ல வணிக சூழ்நிலையை உருவாக்கவும் சீன வணிக அமைச்சகம் முயற்சி எடுத்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டை ஈரப்பதைத் தவிரவும், சீன தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சீனாவின் முதலீட்டுத் தொகை, தொடர்ந்து 2 ஆண்டுகளாக உலகின் 2வது இடத்தில் உள்ளது. 2016ம் ஆண்டின் இறுதி வரை, வெளிநாடுகளில் சீனாவின் மொத்த சொத்துக்கள், 5லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது.

எதிர்காலத்தில்,வெளிநாட்டு முதலீடு,தொழிலாளர் சேவை ஒத்துழைப்பு முதலான துறைகளில் சீன வணிக அமைச்சகம் தொடர்ந்து ஒருங்கிணைத்து அவற்றின் வளர்ச்சியை முன்னெடுக்கும்.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்