சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கான வரவேற்பு

பூங்கோதை 2017-10-17 10:26:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டிற்கு சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கான வரவேற்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டுக்கான செய்தி மையம், அக்டோபர் 16ஆம் நாளிரவு விருந்து நடத்தியது. 500க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அழைப்பை ஏற்று இதில் கலந்து கொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டிற்கு சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கான வரவேற்பு

இம்மாநாட்டின் செய்திக் குழுவின் தலைவர் குவாங் கூன்மிங், செய்தியாளர்களுக்கு வரவேற்பைத் தெரிவித்தார். சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தை முன்னேற்றும் முக்கிய கால கட்டத்தில் நடைபெறும் ஒரு மாநாடு இதுவாகும். சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள், இம்மாநாடு பற்றிய தகவல்களையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளையும், சீனா பெற்றுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளையும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் உலகத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு, சீன மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, 3068 சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இம்மாநாடு பற்றி செய்திகளை வெளியிடுவார்கள். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்