ச்சான் பா - சீன அழகியலின் அடையாளம்

சரஸ்வதி 2017-11-10 09:09:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ச்சான் பா - சீன அழகியலின் அடையாளம்

“உலகில் உள்ள ஒவ்வொரு புல்லுக்கும் ஒவ்வொரு பறவைக்கும் ஒரு வாழ்வு உண்டு” என்று ச்சான் பா சூழலியல் மாவட்டம் என்னும் நூலினை எழுதிய ஹே பிங்க் அன் அந்நூலின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எளிமையான வார்த்தைகளாக இருந்தாலும் அதன் பொருள் வலிமையானது. அவரின் அந்தக் கூற்றை மெய்ப்பித்துக் காட்டியுள்ளது ச்சான் பா சூழலியல் மண்டலம்.

ச்சான் பா - சீன அழகியலின் அடையாளம்

ச்சான் மற்றும் பா ஆகிய இரு ஆறுகளை ஒட்டி கட்டியமைக்கப்பட்டுள்ளதால் இந்த சூழலியல் மண்டலத்திற்கு ச்சான் பா என்று பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உரியின வாழ்க்கைச் சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து, தூய்மையான தொடரவல்ல வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில் இந்த சூழலியல் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் சதுப்பு நிலப் பகுதிகளுள் ஒன்றாகத் திகழும் இந்தப் பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை கட்டிட கழிவுகள் நிரம்பிய ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதன்பின், சீன அரசு,  சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ச்சான் பா பகுதியின் சூழலியலை மீட்டெடுத்துள்ளது. அதோடு, சீனாவின் அழகியலை வெளிப்படுத்தும் விதமாக இப்பகுதியில் ச்சான் பா தேசிய சதுப்புநிலப் பூங்கா ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

ச்சான் பா - சீன அழகியலின் அடையாளம்

நகரக் கட்டமைப்பு திட்டம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் உலகின் தலைசிறந்த சுற்றுலா தலங்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதோடு, இந்தச் சூழலியல் மண்டலம் உருவாக்கப்பட்ட சூழலை எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் இப்பகுதியில் “ச்சான் பா சூழலியல் மாவட்ட நகரக் கட்டமைப்பு அருங்காட்சியகம்” ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

ச்சான் பா - சீன அழகியலின் அடையாளம்

அனைத்து உயிர்களுக்குமான இந்த உலகம்,  மாறிவரும் பல்வேறு சூழல்களால் புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு உள்ளிட்ட எண்ணற்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. உலகின் இந்தச் சூழலை மாற்ற, பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த சூழலியல் மண்டலங்களை உருவாக்க வேண்டியது மிக மிக அவசியம். ச்சான் பா சூழலியல் மண்டலத்தை உருவாக்கியதன் வழி, சீன அரசு, “பசுமையான அழகான சீனா” என்னும் பெருங்கனவை நனவாக்கியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்