வாங் ஹுநிங்-வெளிநாட்டு விருந்தினர்கள் சந்திப்பு

வான்மதி 2017-12-04 16:56:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4ஆவது உலக இணைய மாநாட்டில் கலந்து கொண்ட தாய்லாந்தின் துணைத் தலைமை அமைச்சர் ப்ராஜின் ஜுண்டாங், மங்கோலியாவின் துணைத் தலைமை அமைச்சர் சகாண்டரி ஏன்க்துவ்ஷின், பிரான்ஸின் முன்னாள் தலைமை அமைச்சர் டொமினிக் டே வில்லேபின், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், சிஸ்கொ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ் ஆகியோரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய கமிட்டி செயலகத்தின் உறுப்பினருமான வாங் ஹுநிங் 3ஆம் நாள் செச்சியாங் மாநிலத்தின் வூ சென்னில் சந்தித்துரையாடினார்.

வாங் ஹுநிங்-வெளிநாட்டு விருந்தினர்கள் சந்திப்பு

ப்ராஜின் ஜுண்டாங்கைச் சந்தித்தபோது வாங் ஹுநிங் கூறுகையில், தாய்லாந்துடன் இணைந்து அனுபவங்களின் பரிமாற்றத்தை அதிகரித்து, உலக இணைய மேலாண்மை அமைப்பு முறையைக் கூட்டாக கட்டியமைக்க சீனா விரும்புகிறது என்று கூறினார்.

வாங் ஹுநிங்-வெளிநாட்டு விருந்தினர்கள் சந்திப்பு

குக்குடன் பேசிய போது, இணையத் துறையில் சீனாவும் அமெரிக்காவும் பொது நலன்களைக் கொண்டுள்ளன. இருதரப்பும் தற்போதைய நல்ல வளர்ச்சிப் போக்கைப் பேணிக்காத்து, பொது இணைய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்