2017 உலக இணைய வளர்ச்சி நீல அறிக்கைகள்

நிலானி 2017-12-04 18:29:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


“2017 உலக இணைய வளர்ச்சி பற்றிய அறிக்கை”, “2017 சீன இணைய வளர்ச்சி பற்றிய அறிக்கை” ஆகிய இரண்டு நீல அறிக்கைகள் சீனாவின் வூ சென்னில் நடைபெற்று வரும் 4ஆவது உலக இணைய மாநாட்டில் 4ஆம் நாள் வெளியிடப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் சீனாவின் இணைய வளர்ச்சி நிலைமையும் எதிர்கால முன்னேற்றப் போக்கும் இவ்வறிக்கைகளில் பன்முகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், 2017 உலக இணைய வளர்ச்சி அறிக்கையில் உலக இணைய வளர்ச்சி பற்றிய வரையறைக் குறியீட்டு முறை முதன்முறையாக  வெளியிடப்பட்டது. அதன்படி, அமெரிக்கா, சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் இணைய வளர்ச்சியில் உலகின் முதல் மூன்று இடங்களில் வகிக்கின்றன.

அடிப்படை வசதி, புத்தாக்க ஆற்றல், தொழில்துறை வளர்ச்சி, இணையப் பயன்பாடு, இணையப் பாதுகாப்பு, இணைய நிர்வாகம் ஆகிய ஆறு அம்சங்கள் இந்த வரையறைக் குறியீட்டு முறையில் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்