2ஆவது சீன-கனட தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

நிலானி 2017-12-05 15:28:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீன-கனட தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் கனடத் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரிடோவுடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். இது, இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களுக்கிடையேயான ஆண்டு பேச்சுவார்த்தையின் 2ஆவது கூட்டமாகும்.

இவ்வாண்டு சீன-கனடா உறவின் வளர்ச்சியை லீக்கெச்சியாங் வெகுவாகப் பாராட்டினார். இரு நாட்டுத் தொலைநோக்குக் கூட்டாளியுறவு  புதிய சாதனைகளைப் பெறும் வகையில்,  சீனா, கனடாவுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ட்ரிடோ கூறுகையில், கனடா-சீன ஒத்துழைப்பில் வளர்ச்சிக்கான மாபெரும் வாய்ப்பு உள்ளது. கனடா, சீனாவுடன் இணைந்து இரு நாட்டின் நட்புறவை தொடர்ந்து நிலைப்படுத்தி கூட்டு வெற்றி பெற விரும்புகிறது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்