4ஆவது உலக இணைய மாநாடு நிறைவு

வான்மதி 2017-12-05 18:35:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4ஆவது உலக இணைய மாநாடு நிறைவு

4ஆவது உலக இணைய மாநாடு 5ஆம் நாள் சீனாவின் வூசென் வட்டத்தில் நிறைவடைந்தது.

சீனத் தேசிய இணைய தகவல் பணியகத்தின் தலைவர் நிறைவு விழாவில் பேசிய போது, உலக இணைய மாநாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்கத்துக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார். விருந்தினர்களுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, உலக இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மை பற்றி முக்கிய கருத்துக்களையும் முன்வைத்தார். அவரது கருத்துக்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது என்று கூறினார்.

நடப்பு மாநாட்டின் போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் வேறுபட்ட தனிச்சிறப்புகளைக் கொண்ட கருத்தரங்குகளில் சிந்தனைகளை வழங்கி, புதுமையான சாதனைகளை வெளிப்படுத்தி, ஒத்துழைப்பு வழிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விவாதம் நடத்தி, செழிப்பான பயன்களைப் பெற்றுள்ளனர். சீன இணைய வளர்ச்சி பற்றியும் உலக இணைய வளர்ச்சி பற்றியும் முதன்முறையாக வெளியிடப்பட்ட அறிக்கைகளைத் தவிர, வூசென் எதிர்பார்ப்பு எனும் ஆண்டிற்கான சாதனை ஆவணமும் இம்மாநாட்டில் வெளியிடப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்