சேவைக்கு வந்துள்ள சிஆன்-சேங்து உயர்வேக இருப்புப்பாதை

வான்மதி 2017-12-06 16:06:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சேவைக்கு வந்துள்ள சிஆன்-சேங்து உயர்வேக இருப்புப்பாதை

சீஆன்-சேங்து இடையேயான உயர்வேக இருப்புப்பாதையின் சீஆன்-ஜியாங்யோ பகுதி 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிஆன்-சேங்து உயர்வேக இருப்புப்பாதை கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்துள்ளதை இது காட்டுகிறது. பிரதேசத்தின் உயர்வேக இருப்புப்பாதை பிணையத்தை மேம்படுத்தி, பிரதேச பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்த இருப்புப்பாதை முக்கியத்துவம் வாய்ந்தது.

சேவைக்கு வந்துள்ள சிஆன்-சேங்து உயர்வேக இருப்புப்பாதை

மொத்தம் 658 கிலோமீட்டர் நீளமுடைய சீஆன்-சேங்து உயர்வேக இருப்புப்பாதையில், தொடர்வண்டியின் திட்டமிட்ட வேகம் மணிக்கு 250 கிலோமீட்டராகும். சீஆன்-சேங்து இடையேயான பயண நேரம், 11 மணி 50 நிமிடங்களிலிருந்து 3 மணி 27 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. சீனாவின் தென் மேற்கிலுள்ள உயர்வேக இருப்புப்பாதைகள் நாட்டின் உயர்வேக இருப்புப்பாதை பிணையத்தில் முழுமையாக இணைய உள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்