சீன விரைவு அஞ்சல் தொழிலின் புதுமையான வளர்ச்சி

மதியழகன் 2018-01-08 14:54:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அஞ்சல் துறையை வலுப்படுத்தும் தலைப்பிலான விரைவு அஞ்சல் துறையில் மாநாடு, 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனாவில் விரைவு அஞ்சல் துறை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக உலகில் முதலிடம் வகிக்கிறது. உலகின் விரைவு அஞ்சல் துறையின் வளர்ச்சியில் சீனா, 40 விழுக்காடு பங்காற்றியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வரை, சீனாவில் பதிவு செய்துள்ள விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை, 22ஆயிரம் ஆகும். நாள்தோறும் 10 கோடிக்கும் அதிகமான விரைவு அஞ்சல் சேவைகளைக் கையாளும் நிரந்தர நிலை இதில் உள்ளது. சராசரியாக ஒரு அஞ்சல் பை, 3 நாட்களுக்குள் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

விரைவு அஞ்சல் துறையின் வேகமான வளர்ச்சிப் போக்கில், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் இணையம், மேகக் கணிமை உள்ளிட முன்னிலை தொழில் நுட்பங்கள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், விரைவு அஞ்சல் துறையின் சேவைத் தரமும்  செயல்திறனும் மேம்பட்டு வருகிறது.

சீனபோஸ்ட் விரைவு அஞ்சல் மற்றும் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை மேலாளர் ஃபாங் ச்சிய்பெங் விரைவு அஞ்சலின் எதிர்காலம் பற்றி பேசுகையில், சீனாவின் விரைவு அஞ்சல் துறைக்கு இன்னும் பெரும் வளர்ச்சி வாய்ப்பு உண்டு என்று கருதுகிறார். அவர் மேலும் கூறியதாவது

சீனாவில், 22ஆயிரம் விரைவு அஞ்சல் நிறுவனங்கள் உள்ளன. ஆனால்,  மொத்த வருமானம், 40ஆயிரம் கோடி யுவானுக்கு குறைவு. இது, டி.எச்.எல் நிறுவனங்களின் 75 விழுக்காட்டுக்கும், யு.பெ.எஸ் நிறுவனத்தின் 88 விழுக்காட்டுக்கும் சமமாகும். இத்தொழில் துறையில்  அதிகமான வாய்ப்புகளுடன் வலுவற்ற நிலை காணப்படுகிறது.  எதிர்காலத்தில், அலுவல்களின் எண்ணிக்கை  1000 கோடியையும், வருமானம், 10ஆயிரம் கோடி யுவானைத் தாண்டும் 3 முதல் 4 பெரிய நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெரும் மக்கள் தொகையால் ஏற்படும் நன்மை குறைந்து வரும் பின்னணியில், தொழில் நுட்பமானது, விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்களின் எதிர்காலமாகும் என்று இம்மாநாட்டில் பொதுவாக கருதப்படுகிறது. எதிர்காலம், விரைவு அஞ்சல் நிறுவனங்கள், தொழில் நுட்பம் ரீதியிலான நிறுவனமாக மாறி வளர்ந்து வருகிறது.

இது வரை, புதிய தொழில் நுட்பங்கள் பரவலாகி வருவதுடன், இயந்திர மனிதன், நுண்ணறிவு அஞ்சல் பெட்டி, ஆளில்லா விமானம், ஆளில்லா வண்டி உள்ளிட்டவை, விரைவு அஞ்சல் துறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கூடுதலாக, நவீனமான அஞ்சல் துறையில் சர்வதேச பார்வைக் கொண்ட திறமைசாலிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும்,  புதிய ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்கி, அடிப்படை ஆய்வு சாதனைகளை தொழில் நுட்பமாக மாற்ற வேண்டும் என்றும் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்