சீன-பிரான்ஸ் ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு

பூங்கோதை 2018-01-10 10:10:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பிரான்ஸ் ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் ட்சாங் தெஜியாங் ஆகியோர் முறையே சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவல் மேக்ரானை ஜனவரி 9ஆம் நாள் தனித்தனியாக சந்தித்துரையாடினர்.

சீர்திருத்தத்தை ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவுப்படுத்தி வருகின்ற சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட உலகப் பல்வேறு நாடுகளுக்கு மேலதிக ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்கும். அணு ஆற்றல், விமான சேவை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், ஐரோப்பிய ஒருமைப்பாட்டுக்கான வளர்ச்சிப்போக்குக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

சீன-பிரான்ஸ் ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு

ட்சாங் தெஜியாங் கூறுகையில், இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கியுள்ள முக்கிய பொது கருத்துகளைச் செயல்படுத்தி, சட்டமியற்றல் நிறுவனங்களுக்கிடையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்துவது, இரு தரப்புகளின் முதன்மை கடமையாகும். இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.

இம்மானுவல் மேக்ரான் பேசுகையில், சீனாவுடன் நீண்டகால ஒத்துழைப்புகளை மேற்கொள்வதன் அடிப்படையில், இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் மேற்கொள்ள பிரான்ஸ் விரும்புகிறது. மேலும், பிரான்ஸ்-சீன மற்றும் ஐரோப்பிய-சீன உறவு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைவதை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு தரப்பும் புதிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்