சீனா:தைவானுடன் தொடர்பு கொள்வது பற்றிய மசோதாவின் பரிசீலனை அமெரிக்கா நிறுத்த வேண்டும்

நிலானி 2018-02-09 16:59:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரே சீனா என்ற கொள்கை, சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையாகும். எனவே, தைவானுடன் தொடர்பு கொள்வது பற்றிய மசோதாவின் பரிசீலனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அதோடு, தைவானுடனான விவகாரங்களை உகந்த முறையில் கையாள வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்ஷூவாங் 9ஆம் நாள் தெரிவித்தார்.

இந்த மசோதா, ஒரே சீனா கொள்கை மற்றும் மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளின் விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்றும் இதைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்