சீனப் பொருளாதா வளர்ச்சியில் புதிய உந்து சக்திகளின் பெரும் பங்களிப்பு

மதியழகன் 2018-02-11 17:02:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உந்து சக்திகளின் பங்களிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. பொருளாதார அதிகரிப்பில், புதிய உந்து சக்திகளின் பங்களிப்பு விகிதம், 30விழுக்காட்டுக்கும் மேலாகும். நகரப்புறங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இது 70 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பங்கு ஆற்றுகிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மெங் வெய் 11ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கிழக்குப் பகுதிகளிலுள்ள சில மாநிலங்களில், புதிய உந்து சக்திகள், பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய பங்களிப்புகளை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டத்தில், புதிய தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, இணையம், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய தொழில்கள் மற்றும்  பொருளாதாரம் சார் பல்வேறு தொழில்களுக்கிடையேயான ஒன்றிணைப்பை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்