2017ஆம் ஆண்டில் மேம்பட்டுள்ள சீனாவின் காற்று சுற்றுச்சூழல்

பூங்கோதை 2018-02-11 18:25:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வானிலைப் பணியகம் பிப்ரவரி 11ஆம் நாள் வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான காற்று சுற்றுச்சூழல் பற்றிய கூட்டறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டு, சீனாவில் பெருமளவான புகைமூட்டம் 6 முறை மட்டுமே நிலவியது. சீனாவில் காற்று சுற்றுச்சூழல் தெளிவாக மேம்படுத்தப்பட்டுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டு, புகைமூட்டம் ஏற்பட்ட நாட்களின் எண்ணிக்கை சராசரியாக 27.5 ஆகும். இது, 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட 10.5 நாட்களாக குறைவாகும். 2013ஆம் ஆண்டில் இருந்ததை விட 19.4 வாட்களாக குறைவாகும். 2013ஆம் ஆண்டு, சீனாவில் பலமுறை புகைமூட்டம் நிலவியுள்ளது. இந்நிலையில், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் பணியை சீனா 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளத் துவங்கியது. இதனால் தற்போது சீனாவின் காற்று சுற்றுச்சூழல் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்