வணிக போர் பற்றிச் சீனாவின் கருத்துக்கள்

மோகன் 2018-03-11 15:00:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வணிக போர் பற்றிச் சீனாவின் கருத்துக்கள்

வணிகப் போரில் ஏதேனும் ஒரு தரப்பு நிச்சயம் தோல்வியுற்றே தீரும். சீனா வணிகப் போரில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன், சீனா எவ்வித வணிகப் போரையும் தொடுக்காது. தேசிய மற்றும் மக்களின் நலன்களை பேணிக்காக்கும் வகையில், எவ்வித அறைகூவலையும் சமாளிக்கும் என்று சீன வணிக அமைச்சர் ட்சொங் ஷான் 11ஆம் நாள் நடைபெற்ற சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வணிக போர் பற்றிச் சீனாவின் கருத்துக்கள்

கடந்த 40 ஆண்டுகளில், சீன-அமெரிக்க ஆகிய இரு நாடுகளின் வணிக அளவு 232 மடங்கு அதிகரித்துள்ளது. கூட்டு முதலீட்டு தொகை 23 ஆயிரம் கோடி அமெரிக்க டலாரைத் தாண்டியுள்ளது. இரு நாட்டுப் பொருளாதாரத் துறையில் ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை இது கோடிட்டுக்காட்டியுள்ளது. அதோடு, இரு தரப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு உள்ளார்ந்த ஆற்றலையும் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

வணிக போர் பற்றிச் சீனாவின் கருத்துக்கள்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்