போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2018-ஆம் ஆண்டு கூட்டம் நிறைவு

தேன்மொழி 2018-04-11 20:14:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2018-ஆம் ஆண்டு கூட்டம் ஏப்ரல் 11-ஆம் நாள் பிற்பகல் ஹெய் நான் மாநிலத்தின் போ ஆவில் நிறைவடைந்தது. 63 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் இவ்வாண்டு கூட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

போ ஆவ் ஆசிய மன்றத்தின் தலைமைச் செயலாளர் ட்சொ வென் சொங் நிறைவு விழாவின் செய்தியாளர் கூட்டத்தில், உலகமயமாக்கம் மற்றும் தாராள வர்த்தகம் அறைக்கூவல்களை எதிர்நோக்கும் பின்னணியில் இம்மன்றக் கூட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார். ஆசியா மற்றும் உலகின் பல்வேறு துறைகளிலிருந்து வந்த தலைவர்கள் ஒன்று கூடி, உலகமயமாக்கம் குறித்து விவாதம் நடத்தினர் என்றார்.

நடப்பு ஆண்டு கூட்டம் திட்டமிட்ட இலக்கை நனவாக்கி, ஆசிய நாடுகளின் ஒத்த கருத்துக்களை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்