உலக நிர்வாகத்துக்கான 2018 உயர் நிலை கருத்தரங்கு துவக்கம்

இலக்கியா 2018-04-12 15:22:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக நிர்வாகத்துக்கான 2018 உயர் நிலை கருத்தரங்கு துவக்கம்

உலக நிர்வாகத்துக்கான 2018ஆம் ஆண்டின் உயர் நிலை கருத்தரங்கும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கான 2018ஆம் ஆண்டின் நிதி முதலீட்டுக் கருத்தரங்கும், 12ஆம் நாள் சீனாவின் குவாங் ச்சோ நகரில் துவங்கியுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள வங்காள தேசம், எகிப்து உள்ளிட்ட பத்து நாடுகளைச் சேர்ந்த அலுவலர்களும், ஐ.நா, சர்வதேச நாணய நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வளர்ச்சி அமைப்புகள் மற்றும் சிந்தனை கிடங்குகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய சுமார் 300 பேர் இவற்றில் கலந்து கொண்டனர்.

பெரும் சீர்திருத்தம் ஏற்படக் கூடிய முக்கியப் போக்கில் தற்போதைய உலக வர்த்தக முறைமை இருக்கிறது. உலகமயமாக்க வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனா நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஆக்கப்பூர்வமாகப் பங்களித்து வருகிறது என்று இக்கருத்தரங்கங்களில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்