பெய்ஜிங்கில் சீன-இந்திய நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை

மதியழகன் 2018-04-15 15:36:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் சீன-இந்திய நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான 5ஆவது நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை 14ஆம் நாள் சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் தலைவர் ஹெ லீஃபெங்கும், இந்திய நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமாரும் இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

கடந்த செப்டம்பர் சீனாவின் சியாமென் நகரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் சந்தித்த பிறகு நடத்தப்பட்ட முதல் பேச்சுவார்த்தை இது ஆகும். இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காகவும், இரு தரப்புப் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காகவும் செயலுக்கு வந்துள்ள முக்கிய நிகழ்ச்சியாக இது என்று கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் சீன-இந்திய நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை

நடப்புப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், இரு தரப்பு உறவு, பயனுள்ள ஒத்துழைப்புகள் ஆகிய விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் போதுமானதாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒரு தொகுதியான பொது கருத்துக்களை உருவாக்கியுள்ளன.

பொருளாதார அளவில், உலகின் 2ஆவது மற்றும் 7ஆவது இடத்தில் உள்ள சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு வாய்ப்பு அதிகமாகவும், எதிர்காலம் அகலமாகவும் உள்ளது. உலகின் மிக பெரிய இரண்டு வளரும் நாடுகள், ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெற்றால், பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியின் உந்து ஆற்றலாக இருக்கும் என்று பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கைகளின் ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்புக் கட்டுமானம், உயர் தொழில் நுட்பம், எரியாற்றல் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும் மக்கள் வாழ்க்கை தொடர்பான துறைகளுக்கு மேலதிக ஒதுக்கீடு செய்து, இரு நாட்டுப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்டி,இரு நாட்டு மக்களைப் பயனடையச் செய்வது என்றும் இரு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்