இந்தியாவுடனான உறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விருப்பம்

மதியழகன் 2018-04-16 18:46:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகமான மற்றும் பொதுவான நலன்கள் உள்ளன. இரு தரப்பு ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் அதிகம். இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னுக்கு கொண்டு செல்ல இந்தியாவுடன் இணைந்து முயற்சி செய்யவும் சீனா விரும்புகிறது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.

5வது சீன-இந்திய நெடுநோக்குப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது

பெய்ஜிங்கில் 5வது சீன-இந்திய நெடுநோக்குப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை  

அண்மைக்காலமாக, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகாரம் சார்ந்த நிகழ்வுச்சிகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளி விவகார ஆணைய அலுவலகத் தலைவர் யாங் ஜியேச்சியும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் குமார் தோவலும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 5வது சீன-இந்திய நெடுநோக்குப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவை குறித்து குவா ச்சுன்யிங் தெரிவித்ததாவது

இவ்வாண்டு முதல், இரு நாட்டுத் தலைவர்களின் தலைமையில், சீன-இந்திய உறவில் நல்ல வளர்ச்சிப் போக்கு தொடர்ந்து காணப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவுடன் இணைந்து, இருதரப்பு உறவின் சரியான வளர்ச்சித் திசையைக் கடைப்பிடித்து, மேலதிக நேர்மறை சக்தியை கொண்டு வந்து, புதிய ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டுறவு சீராக வளர்வதை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்