பலதரப்பு வர்த்தக முறைமையைப் பேணிக்காக்கும் சீனா

மதியழகன் 2018-04-16 18:49:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங்

அமெரிக்காவின் ஒருதரப்பு வாதம் மற்றும் பாதுகாப்பு வாதம் ரீதியிலான வர்த்தக்க் கொள்கை, சீனாவின் நலன்களையும், பலதரப்பு வர்த்தக முறைமை மற்றும் உலக நாடுகளின் நலன்ளையும் பாதித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங் 16ஆம் நாள் தெரிவித்தார்.

பொருளாதாரத் திறப்பு மற்றும் வர்த்தகச் சுதந்திரத்துக்காக ஆஸ்திரேலியா பாடுபடுவதாகவும், அமெரிக்கா ஒருசார்பாக சில வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதாகவும், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததற்குப் பதிலளித்தபோது, குவா ச்சுன்யிங் இவ்வாறு கூறினார்.

பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து ஒருதரப்பு வாதம் மற்றும் பாதுகாப்பு வாதத்தை கூட்டாக தடுத்து, பலதரப்பு வர்த்தக முறைமையைப் பேணிக்காத்து, திறந்த நிலை உலக பொருளாதாரத்தை கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்றும் குவா ச்சுன்யிங் தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்