ஷாங்காயில் சிரியா பிரச்சினைக்கான கருத்தரங்கு

வான்மதி 2018-05-14 14:02:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காயில் சிரியா பிரச்சினைக்கான கருத்தரங்கு

சிரியா பிரச்சினைக்கான தீர்வு மற்றும் எதிர்காலம் எனும் சர்வதேச கருத்தரங்கு மே 13, 14 ஆகிய நாட்களில் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சிரியா பிரச்சினை தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு சீனாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை.

சீனா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளின் சிரியா பிரச்சினைக்கான சிறப்புத் தூதர்கள், ஐ.நா. தலைமைச் செயலாளரின் சிரியா பிரச்சினைக்கான சிறப்புத் தூதர், சீனா, எகிப்து, ஈரான், சௌதி அரேபியா, சிரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், அறிஞர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

சீனச் சிறப்புத் தூதர் சியே சியாவ்யான் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது, சிரியா பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு மற்றும் முயற்சிகளை விவரித்தார். மேலும், சர்வதேச சமூகம் அரசியல் பேச்சுவார்த்தையின் மூலம் பல்வேறு தரப்புகளின் கவனத்தைக் கருத்தில் கொண்டு சிரியாவின் நடைமுறைக்கு ஏற்ற தீர்வு முறையைக் கண்டறிய வேண்டும் என்றும், சிரியா மக்களுக்கு இயன்ற அளவில் தொடர்ந்து உதவியளித்து, உரிய நிலையில் அந்நாட்டின் மறுசீரமைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்