ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான புத்தகம்

2018-05-14 15:05:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் எதிர்காலம் எனும் புத்தகம், இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் ரஷித் அலிமொவின் புதிய படைப்பயாகும். மே 13ஆம் நாள், இப்புத்தகத்தின் சீன மொழி பதிப்பின் வெளியீட்டு விழா, இவ்வமைப்பின் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம், சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஜூன் திங்களில், ட்சிங்தாவ் நகரில் இவ்வமைப்பின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு, இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. இம்மாநாட்டில் 8 உறுப்பு நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பு திசை உறுதி செய்யப்பட்டு, கூட்டு அறிவுத்திறமை மற்றும் நம்பிக்கை வலுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வெளியீட்டு விழாவுக்குப் பின் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இவ்வமைப்பின் எதிர்கால வளர்ச்சி குறித்து பல நிபுணர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்