வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு வேண்டும்:சீனா

மதியழகன் 2018-05-14 18:32:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அணு பிரச்சினையில் வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு

வானிலைக்கு ஏற்ப, வரும் மே 23 முதல் 25 வரையான நாட்களில் பங்க்கியே-ரி அணு சோதனைக் களத்தை அழிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்கும். மேலும், சீனா, ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுப்பதாகவும், வடகொரிய வெளியுறவு அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் திங்கள்கிழமை கூறுகையில்

வடகொரியாவின் இந்த நடவடிக்கை, கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மையை முன்னெடுக்கும் நல்லெண்ணத்தைக் காட்டுகிறது.  இது கொரிய தீபகற்ப பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உதவும்.  வடகொரியாவின் இந்த முடிவு, பன்னாட்டுச் சமூகத்தின் வரவேற்பு, ஊக்கம் மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கொரிய தீபகற்பத்தில், அரசியல் தீர்வு என்ற திசையை நோக்கிச் செல்லும் சூழ்நிலை தற்போது காணப்படுகிறது. பல்வேறு தரப்புகள், பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி, நம்பிக்கையை அதிகரிக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை சீனா ஊக்குவிப்பதாக, லு காங் கூறினார்.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்