சீனாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்

மதியழகன் 2018-05-15 19:19:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்

2017ஆம் ஆண்டின் இறுதி வரையான காலக் கட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த 5லட்சம் மாணவர்கள் சீனாவில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இது, மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையிலும், 60 விழுக்காடு பங்கு வகிக்கிறது என்று சீன கல்வி  அமைச்சகம்  புதிதாக வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சீனாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசியாவில் மிக அதிக வெளிநாட்டு மாணவர்கள் கொண்டுள்ள நாடாக, சீனா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைத் தரவரிசையில், தென்கொரியா, தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.  கலைத் துறைகளின் பார்வையில், மனிதவியல் மற்றும் சமூக இயலைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, சுமார் 50 விழுக்காட்டு விகிதத்துடன் முதல் இடம் வகிக்கிறது. பொறியியல், மேலாண்மை,  அறிவியல், கலை, வேளாண்மை ஆகிய துறைகளில் படித்தவர்களின் எண்ணிக்கை  ஆண்டுக்கு 20 விழுக்காட்டுக்கு மேலாக உயர்ந்து வருகிறது.

தற்போது,  வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் சீன பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை, 935ஐ எட்டியது. கடந்த காலத்தை நினைவு கூரும் போது, 40 ஆண்டுகளுக்கு முன்பு, 12,00 வெளிநாட்டு மாணவர்கள் மட்டும்  சீனாவில் படித்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை சுமார் 5 இலட்சமாக உயர்ந்துள்ளது. அப்போது, மாணவர்கள், பத்துக்கும் குறைந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது, 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவில் படித்து வருகின்றனர்.

கூடுதலாக, சீனாவில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 75ஆயிரத்தைத் தாண்டியது. சீன அரசின் கல்வி பரிசானது, வெளிநாட்டு மாணவர்களைக் கவரும் விதமான செல்வாக்கினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் பங்களிப்புடன், வெளிநாட்டு மாணவர்கள் சீனாவில் படிக்கும் முன்னேற்றப் போக்கு, உயர் மட்டத்திலும் உயர் தரத்திலும் வளர்ந்து வருகிறது. 2017ஆம் ஆண்டு 58 ஆயிரத்து 600 மாணவர்கள் சீன அரசின் கல்வி பரிசுகளைப் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையின் பாதிக்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்