10ஆவது சுற்று சீன-அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சிவகாமி 2018-05-16 10:51:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன சர்வதேசப் பொருளாதாரப் பரிமாற்ற மையம், அமெரிக்க வணிகச் சங்கம் ஆகியவை கூட்டாக நடத்திய 10ஆவது சுற்று சீன-அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை 15 மற்றும் 16ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன-அமெரிக்க கொள்கைப் போக்கு, இரு நாட்டு எதிர்கால நடவடிக்கை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, எண்ணியல் பொருளாதாரம், உலக அறிவியல் தொழில் நுட்பத் தொழில் ஆகியவை குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சீனாவும் அமெரிக்காவும் இன்னல்கள் மற்றும் அறைகூவல்கள் எதிர்கொண்டாலும், இரு நாடுகளுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு என்று இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமெரிக்க தரப்பினர் தொலைத்தொடர்பு, உணவு, மருத்துவம், நிதி, தரவு, அறிவியல் தொழில் நுட்ப ஆக்க தொழில் முதலிய துறைகளைச் சேர்ந்தவர். அத்துடன், சீன தரப்பினர், எரியாற்றல், விமான சேவை, இரும்புருக்கு, வாகனம், வேளாண்மை, தானியம் முதலிய துறைகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்