வறுமை ஒழிப்பு பற்றிய முன்மாதிரியைத் திரட்டும் நடவடிக்கை

2018-05-23 16:41:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகளவில் வறுமை ஒழிப்பு பற்றிய முன்மாதிரிகளைத் திரட்டும் நடவடிக்கை, மே 23-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன வறுமை ஒழிப்புக்கான சர்வதேசக் கருத்தரங்கில் துவங்கியது. மே 23-ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 23-ஆம் நாள் வரை இந்நடவடிக்கை நீடிக்கும். இதன் மூலம் திரட்டப்படும் மாதிரிகளில் தலைசிறந்த 100 முன்மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வாண்டின் அக்டோபர் திங்களில் வெளியிடப்படும்.

மேலும், சீன அரசவையின் வறுமை ஒழிப்புப் பணிக்கான தலைமைக் குழுத் துணைத் தலைவர் ட்சென் ஜி காங் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்தியபோது, சீனாவின் வறுமை ஒழிப்பு பற்றிய சாதனைகளை எடுத்துக்கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்