இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டம் - ஹய்அர் குழுமம்

சரஸ்வதி 2018-05-24 09:02:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டம் - ஹய்அர் குழுமம்

இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டம் - ஹய்அர் குழுமம்

உலக அளவில் தனது காலடியை விரிவாக்கி வரும் மின்சாதன உற்பத்திப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஹய்அர் குழுமமும் ஒன்று. சீனாவின் ஷங்டொங் மாநிலத்தின் சிங்தாவ் நகரத்தில் குளிர்காற்றை ஏந்தி வரும் கடற்கரை, அணிவகுத்து நிற்கும் மலைகளுக்கு மத்தியில் ஹய்அரின் தலைமையகம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1980களில் தனது பயணத்தை சீனாவில் தொடங்கி இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் தனது கிளைகளை, ஆலமரத்தின் விழுதுகள் போல பரப்பி வளர்ந்து வருகிறது.

ஹய்அர் குழுமத்தின் பிரதான சந்தையாக விளங்குவது தெற்காசியா. அதுவும், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா, இக்குழுமத்தின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

“கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ஹய் அர் குழுமத்தின் வருமானம் 2 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டில் அது 3 முதல் 4 ஆயிரம் கோடி யுவானாக உயரும்” என்று எதிர்பார்ப்பதாக இக்குழுமத்தின் தெற்காசியப் பிரிவு இயக்குநர் சொங் யு ஜுன் தெரிவித்தார்.

இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டம் - ஹய்அர் குழுமம்

இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டம் - ஹய்அர் குழுமம்

மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மின் சாதனப்பொருள்களை உற்பத்தி செய்வதில், ஹய்அர் குழுமம் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தை, மக்கள் பயன்படுத்தும் அன்றாட மின்சாதனப் பொருள்களில் புகுத்தி, உற்பத்தியில் புதுமையை நிகழ்த்தி வருகிறது. இக்குழுமத்தின் திறன் இல்லம் (ஸ்மார்ட் ஹோம்) மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமையலறை முதல் கழிவரை வரை உள்ள மின்சாதனங்களுக்கு வாய் மூலம் கட்டளையிட்டே அவற்றை நம்மால் இயக்க முடியும்.

ஒவ்வொரு நாட்டின் நில அமைவு, மக்களின் உடலமைவு, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக யு ஜுன் சுட்டிக்காட்டுகிறார். தெற்காசிய நாடுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் தனது விரல் நுனியில் வைத்துள்ளார்.

“உதாரணத்துக்கு இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டியை இயக்குவது பெரும்பாலும் பெண்கள். ஆக, பெண்களுக்குத் தகுந்தவாறு அதனை வடிவமைத்துள்ளோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது

“காலநிலை மாற்றம், மாசுபாடு உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண்பது முக்கியம். அதற்கு ஏற்ப எங்களது சமீபத்திய மின்சாதன உற்பத்திப் பொருள்கள் அமைந்துள்ளன” என்று அவர் மொழிகிறார்.

மேலும், இந்தியாவில் நிலவி வரும் நிலையான பொருளாதார வளர்ச்சியின் மீது ஹய்அர் குழுமம் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. அத்துடன், வர்த்தகக் கொள்கைகளை இலகுவாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து யு ஜுன் பாராட்டு தெரிவிக்கிறார். எதிர்வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறித்து அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்புள்ளது என்பதையும் தெரிவித்தார்.

குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளர்களும், முதலாளிகளே என்பதைப் போல, அடிப்படை சம்பளத்தைத் தவிர, திறமை மற்றும் பணியின் அடிப்படையில் அதிக ஊக்கத்தொகையையும் ஹய்அர் குழுமம் அளித்து வருகிறது. தொழிலாளர்களை ஊக்குவிப்பதுடன் அவர்களது புதுமையான சிந்தனையை சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்றும் வருகிறது.

வெறும் லாபம் மட்டும் குழுமத்தின் நோக்கம் அல்ல. லாபத்தில் ஒரு கனிசமான தொகையை, கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்கு செலவிட்டு, சமூகத்தில் தன்னை ஒரு பொறுப்பான நிறுவனமாக நிறுத்தி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்