சீன மற்றும் ஜெர்மனி தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சிவகாமி 2018-05-25 09:50:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 24ஆம் நாள் காலை மக்கள் மாமண்டபத்தில் ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலா மெர்க்கெல் அம்மையாருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்துப்பேசினார். இப்பேச்சுவார்த்தையின் சாதனைகளை இரு தலைமையமைச்சர்களும் வெகுவாகப் பாராட்டினர்.

“16+1” எனப்படும் சீனாவுக்கும் 16 மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு குறித்து லீ கெச்சியாங் கூறுகையில், சீனா மற்றும் 16 மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற இந்த ஒத்துழைப்பு துணை புரியும்.

“16+1” எனப்படும் இந்த ஒத்துழைப்பு, பயனுள்ள ஒத்துழைப்பு மேடையாகும். மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அடிப்படை வசதிக் கட்டுமானத்தை மேம்படுத்தத் துணை புரியும் என்று மெர்க்கெல் அம்மையார் தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்