வட கொரியாவும் அமெரிக்காவும் தூதாண்மை முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்:சீனா

வாணி 2018-05-25 18:26:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய-அமெரிக்க தலைவர்களின் சந்திப்புக் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில், கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மைக்கு இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தத்தம் அக்கறை கொண்ட பிரச்சினைகளை, இரு தரப்புகளும் கவனித்து, கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை முன்னேற்றப் போக்கைத் தூண்ட வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புங்கீ-லி அணு ஆயுத சோதனை தளத்தை அகற்றியுள்ள வட கொரியாவின் செயல்பாட்டுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்