உயர்தரமான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க தலைமை அமைச்சர் வேண்டுகோள்

மதியழகன் 2018-05-26 11:33:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உயர்தரமான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க தலைமை அமைச்சர் வேண்டுகோள்

சீனப் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதை உறுதி செய்யும் அதேவேளையில், உயர் தரமான வளர்ச்சியில் காலடியை எடுத்து வைக்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 25ஆம் நாள் சீன அரசவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

சந்தையின் ஆற்றலை மேலும் வெளிக்கொணரும் வகையில் தொடர்ந்து சீர்திருத்தங்களை ஆழமாக்கி, அரசின் செயல்பாடுகளை மாற்ற வேண்டும். திறப்பை விரிவாக்கி, சீர்திருத்தம் செய்வதன் மூலம் சீனச் சந்தையிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நியாயமான போட்டிச் சூழ்நிலையை அளிக்க வேண்டும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

மக்களை மையமாகக் கொண்டுள்ள வளர்ச்சிக் கோட்பாட்டைப் பின்பற்றிவறுமை நிவாரணம், வேலை வாய்ப்பு, கட்டாயக் கல்வி, அடிப்படை மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் முழுமையான காப்புறுதி முறைமுையை உருவாக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்