சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி துவக்கம்

மதியழகன் 2018-05-26 11:56:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி சனிக்கிழமை 26ஆம் நாள் குய்சோ மாநிலத்தலைநகர் குய்யாங்கில் துவங்கியது.

தற்போது, புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பங்களான இணையம், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு ஆகியவை, உலக நாடுகளின் பொருளாதாரச் சமூக வளர்ச்சி, அரசு நிர்வாகம், சமூக மேலாண்மை, மக்கள் வாழ்க்கை உள்ளிட்ட துறைகளில் பெரிய ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெருந்தரவுத் தொழிலின் சீரான வளர்ச்சியை முன்னேற்றும் வகையிலும், தரவுகளின் பாதுகாப்பு மற்றும் இணைய நிர்வாகம் போன்ற அறைகூவல்களைச் சமாளிக்கும் வகையிலும், பல்வேறு நாடுகள்  பரிமாற்றத்தை வலுப்படுத்தி, தொடர்பையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பொருட்காட்சிக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

பெருந்தரவுத் தொழில்துறையின் புதுமையான வளர்ச்சியை முன்னெடுத்து,  உலக மக்களைப் பயனடைய செய்யும் விதம், பல்வேறு பிரதிநிதிகளும் விருந்தினர்களும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு பரந்த அளவில் ஆலோசிக்க அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்