புர்கினா பாசோவுடான தூதாண்மை உறவு மீண்டும் தொடங்கப்பட்டது: வாங் யீ

2018-05-27 11:44:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

 புர்கினா பாசோவுடான தூதாண்மை உறவு மீண்டும் தொடங்கப்பட்டது: வாங் யீ

சீன மக்கள் குடியரசும் புர்கினா ஃபாசோவும் தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதென்ற கூட்டறிக்கையில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயும், புர்கினா ஃபாசோவின் வெளியுறவு அமைச்சர் அல்பா பார்ரியும் மே 26ஆம் நாள் பெய்ஜிங்கில் கையெழுத்திட்டனர்.

 புர்கினா பாசோவுடான தூதாண்மை உறவு மீண்டும் தொடங்கப்பட்டது: வாங் யீ

வாங் யீ கூறுகையில்

உலகில் ஒரே ஒரே சீனா தான் உண்டு. சீன மக்கள் குடியரசு, சீனாவைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரேயொரு சட்டப்படியான அரசு ஆகும். தைவான், சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி ஆகிய அம்சங்களை புர்கினா ஃபாசோ அரசு இக்கூட்டறிக்கையில் ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்தார். ஒரே சீனா என்ற கொள்கை, சர்வதேச உறவின் கோட்பாடாகவும், பன்னாடுகளில் பொதுக் கருத்தாகவும் விளங்குகிறது. இது, சீனா எந்தவொரு நாட்டுடன் உறவை வளர்ப்பதன் முன்னிப்பந்தனையாகவும் அரசியல் அடிப்படையாகவும் திகழ்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புர்கினா ஃபாசோவின் வெளியுறவு அமைச்சர் பார்ரி கூறுகையில்

இன்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். சீன மக்கள் குடியரசுடனான தூதாண்மை உறவை மீண்டும் தொங்குவது,  புர்கினா ஃபாசோ மக்களின் விருப்பம் மற்றும் நலனுக்குப் பொருந்தியதாக அமைந்துள்ளது என்றார்.மேலும், சீனா வளர்ச்சியில் கண்டு வரும் பெரிய சாதனைகளைப் பாராட்டியதோடு,  சீனாவுடன் நெருக்கமான கூட்டுறவை நிறுவுவதெனவும் புர்கினா ஃபாசோ எதிர்பார்க்கிறது. புர்கினா ஃபாசோ அரசுத் தலைவர் க்ரிஸ்டியன் காபோரே வரும் செம்படம்பர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்