காரல் மார்க்ஸ் தொடர்பான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம்

2018-05-28 15:03:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காரல் மார்க்ஸ் பிறந்த 200ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 28ஆம் நாள் சென்ட்சென் நகரில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

மனித குல சிந்தனை வரலாற்றில், அறிவியல், உண்மை, செல்வாக்கு, பரவல் முதலிய துறைகளில் மார்க்சிசம் தலைசிறந்த இடத்தினை வகிக்கின்றது. கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட உலகின் பல்வகை கட்சிகளுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையும் வலுபடுத்தி, மேலும் ஒரு சிறப்பான உலகை உருவாக்குவதற்குரியத் திறமையையும் ஆற்றலையும் வழங்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக ஷி ச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

50 நாடுகளைச் சேர்ந்த 75 கம்யூனிஸ்ட் கட்சிகளின் 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்