அறிவியல் தொழில் நுட்ப ரீதியிலான வல்லரசாக சீனா உருவாகும்: ஷிச்சின்பிங்

மதியழகன் 2018-05-29 14:23:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அறிவியல் தொழில் நுட்ப ரீதியிலான வல்லரசாக சீனா உருவாகும்: ஷிச்சின்பிங்

சீன அறிவியல் கழகத்தின் 19ஆவது மூத்த அறிஞர் மாநாடும், சீன பொறியியல் கழகத்தின் 14ஆவது மூத்த அறிஞர் மாநாடும் 28ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சிறப்பாகத் துவங்கின. 

அறிவியல் தொழில் நுட்ப ரீதியிலான வல்லரசாக சீனா உருவாகும்: ஷிச்சின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டங்களில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

 • வலிமை மற்றும் மறுமலர்ச்சி காணப்படும் வகையில், அறிவியல் தொழில் நுட்பத்தைப் பெரிதும் வளர்க்க வேண்டும். உலகின் முக்கிய அறிவியல் மையம் மற்றும் புத்தாக்கத் தளமாகவும், அறிவியல் தொழில் நுட்ப ரீதியிலான வல்லரசாகவும் சீனா உருவாக்கப்பட வேண்டும்.

 • 21ஆம் நூற்றாண்டு முதல், புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் தொழிற்துறைப் புரட்சி ஆகியவை, உலக பொருளாதாரக் கட்டமைப்பை மறுசீரமைத்து வருகின்றன.

 • இணையம், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில் நுட்பங்கள் மற்றும் பொருளாதாரம் இடையிலான இணைப்பை முன்னேற்றி, சீனாவின் தொழில்களை உலகின் நடுத்தர மற்றும் உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 • சொந்தமாகவே புத்தாக்கம் செய்வது, உலக அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னிலையை அடைவதற்கான இன்றியமையாத வழியாகும்.

 • முக்கிய மையத் தொழில் நுட்பங்களை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து, புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான உரிமையை சொந்தக் கைகளில் வைக்க வேண்டும்.

 • நல்ல வாழ்க்கைக்கான பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதை இலக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை குறிக்கோளாகவும் கொண்டு, அறிவியல் தொழில் நுட்பத்தில் புதுமையாக்கம் செய்ய வேண்டும்.

 • புதுமையாக்கலே, எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். சீர்திருத்தம், நாட்டின் எதிர்காலத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பத் துறை, மிகவும் அவசியமாகவும் தொடர்ச்சியாகவும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய துறையாகும்.

 • திறந்த சூழ்நிலையில் தற்சார்பு புதுமையாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். கதவை மூடுவதற்குப் பதிலாக, கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.

 • சிக்கலான செயல் ஒழுங்குமுறை, அறிவியலாளர்களின் பணிக்கு தடையை ஏற்படுத்தாது.

 • சீன அறிவியல் கழகம் மற்றும் சீன பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர்கள், நாட்டிற்கு செல்வமாகவும் மக்களின் பெருமையை உண்டாக்குபவர்களாகவும் தேசிய கௌரவமாகவும் விளங்குகின்றனர்.

 • அறிவியலாளர் என போற்றப்படுவது, சீனாவில் எண்ணற்ற குழந்தைகளின் கனவாக உள்ளது. அறிவியல் தொழில் நுட்ப பணியை ஈர்ப்பாற்றல் கொண்ட பணியாகவும், குழந்தைகள் விரும்பும் துறையாகவும் மாற்றச் செய்ய வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்