சீன-ரஷிய சிந்தனை கிடங்கு அமைப்பு மாநாடு

2018-05-30 09:44:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய யுகத்தில் சீன-ரஷிய ஒத்துழைப்பு எனும் தலைப்பில் சீன-ரஷிய சிந்தனை கிடங்கு மன்றக் கூட்டம் 29ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. சீன சமூக அறிவியல் கழகமும் ரஷிய சர்வதேச விவகார ஆணையமும் இம்மாநாட்டை நடத்தின.

சீன முன்னாள் அரசவை உறுப்பினரும், சீன-ரஷிய நட்புறவு, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் சீனத் தரப்புத் தலைவருமான டாய் பிங் கோங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். வரலாற்று அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, சிந்தனை கிடங்கு ஆதரவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், சீன-ரஷிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு மேலும் உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சீன-ரஷிய சர்வதேச மற்றும் பிரதேச ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார உறவு, மனிதவள மேம்பாடு போன்ற துறைகள் குறித்து இதில் கலந்துகொண்டோர் ஆழமாக விவாதித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்