​இரு நாட்டு கூட்டறிக்கையின்படி அமெரிக்கா செயல்பட வேண்டும்:சீனா

மதியழகன் 2018-05-30 17:09:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுமார் 5000 கோடி டாலர் மதிப்பிலான சீனா உற்பத்திப் பொருட்களின் பட்டியலை அமெரிக்கா ஜுன் 16ஆம் நாளுக்குள் வெளியிடவுள்ளது.  அதன் படி சீனாவின் பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை 29ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, சீனாவும் அமெரிக்காவும் வாஷிங்டனில் முன்னர் எட்டியுள்ள பொது கருத்துகளுக்குப் புறம்பானது. அமெரிக்கா, தனது வாக்குறுதியை நிறைவேற்றி, கூட்டறிக்கையின் குறிக்கோளின்படி சீனாவுடன் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும். சமத்துவத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு நடத்தி, ஆக்கப்பூர்வமான முறையில் பொருளாதார வர்த்தக வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்பதில் சீனா எப்போதும் ஊன்றி நிற்கிறது. இது தான், இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின்  நலன்களுக்குப் பொருந்தியது. மேலும் பன்னாட்டுச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகவும் விளங்குகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, தன் விருப்பத்துடன் மட்டும் செயல்பட்டால், சீனா உறுதியுடன் வலுவான நடவடிக்கை மேற்கொண்டு தனது நலன்களைப் பேணிக்காக்கும் என்று ஹுவா ச்சுன்யிங் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்